Skip to main content

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (2013 - 2014)

இந்த 2013 வருடம் வெள்ளிக்கிழமை மே மாதம் 31 தேதி (வைகாசி 17) அன்று காலை சுமார் 8 மணி அளவில் திருக்கணித பஞ்சாங்கப்படி குருவானவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவசிக்கிறார். சுமார் ஒரு வருடம் அவர் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். 

மேஷ ராசிக்கு குரு 9வது மற்றும் 12வது வீட்டிற்கு அதிபதி ஆனவர். மேஷ ராசியின் அதிபதி செவ்வாய்யின் நண்பரும் ஆவார். 9வது வீடு பாக்கிய ஸ்தானம் என்பதால் குரு மேஷ ராசிக்கு நன்மையே செய்யக்குடியவர்.  குரு நல்ல வீட்டில் இருந்தால் மட்டுமே நல்லது செய்யக்குடியவர். 

இந்த வருட குரு பெயர்ச்சியில் குரு மூன்றாவது வீடான மிதுனத்தில் இருக்கிறார். இந்த 3வது வீடு ஓரு நல்ல ஸ்தானம் அல்ல. ஆனால் 3வது வீடு கெட்ட ஸ்தானமும் அல்ல.மிதுனம் என்பது புதனுடைய வீடு ஆகும். குரு புதனை பகையாக கருதுபவர். ஆகவே குரு இந்த 3ம் இடத்தில் பகை என்ற நிலையில் வலுவிழந்து நிற்கின்றார். 

மேலும் மிதுனம் 9வது வீட்டிற்கு 7வது இடமாகவும் 12வது வீட்டிற்கு 4வது இடமாகவும் உள்ளது. 7வது ஸ்தானம் என்பது 9வது வீட்டுக்கான குருவிற்கு பலத்தினை மேலும் குறைத்து விடும். ஆகவே குரு நல்லதை செய்ய பலம் இழந்த நிலையில் உள்ளார். மேலும் 12வது விடடின் ஆதிபத்தியம் குருவிற்கு இருப்பதால் அதிக படியான செலவுகளை செய்ய வைப்பார். ஆனால் மேஷ ராசிக்கு குரு கண்டிப்பாக கெடுதல் செய்ய மாட்டார்.

இப்பொழுது நாம் 2013 வருடத்திற்க்கான குரு பெயர்ச்சியின் பலன்களை நாம் பார்ப்போம்.

31.05.2013 முதல் 08.06.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குடும்பத்திற்கான செலவுகள் நீங்கள் அதிகமாக செய்தாலும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர் மத்தியில் சற்று அதிருப்தி நிலவும். இருந்த போதிலும் குடும்ப உறுப்பினர்கள் மனங்களில் அடிப்படையில் திருப்தியான சந்தோஷங்கள் நிலவும். 

08.06.2013 முதல் 02.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குரு 08.06.2013 அன்று அஸ்தமனமாகிறார். இந்த காலத்தில் குருவால் கிடைக்கும் நல்ல பலன்கள் அனைத்தும் தடைப்படும். மேலும் மேஷ ராசி மற்றும் மேஷ இலக்கின மக்கள் அனைவரும் நல்ல நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள். 02.07.2013 அன்று குரு மீண்டும் உதயமாகிறார்.

இந்த காலத்தில். செலவுகள் கட்டுக்கு அடங்காமல் செல்லும். சரியான நேரத்திற்கு சாப்பிட  முடியாமல், சரியாக ஓய்வு எடுக்க முடியாமலும் செயல் பட முடியமாலும் சிரமப்பட நேரும். உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும். ஆன்மிக எண்ணங்களில் சற்று தளர்வு ஏற்படும்.

02.07.2013 முதல் 13.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

செலவுகள் உங்களின் கட்டுபாட்டிற்குள் வரும். குடும்பத்தில் இருந்து வந்த மன கசப்புகள் சற்று குறையும் உடல்நிலை கருத்தில் கொண்டு சரியான உணவு மற்றும் ஓய்வு எடுக்க முனைவார்கள். 

13.07.2013 முதல் 30.07.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

மேஷ ராசியினர் கடுமையான செலவுகளை கண்டு சற்றே மிரண்டு போய்விடுவார்கள். குடும்ப விசயங்களில் சற்று கவனமாக செயல் படுவது உத்தமம். அல்லது குடும்ப உறுப்பினர்களின் அதிருப்தியினை சம்பாதிக்க வேண்டி இருக்கும்.ஓய்வு எடுக்க முடியாமல் அவதிப்பட வேண்டியிருக்கும்.

30.07.2013 முதல் 15.08.2013 முடிய குரு பெயர்ச்சியின் பலன்கள்:

குடும்பத்தில் இருந்து வந்த மந்த நிலைமை சற்று மாறி குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வுகளை நோக்கி செல்லும். செலவுகளை கட்டுபடுத்துவதில் சிறிய அளவு பயன் அளிக்கும். அவசர கதியில் இருந்த உங்களுக்கு ஓய்வும் கிடைக்கும்.

15.08.2013 முதல் 23.09.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

உண்மையாகவே மன நிறைவான சூழ்நிலைகள் குடும்பத்தில் நடக்க ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மன வேற்றுமைகள் மறைந்து சந்தோசம் தோன்ற ஆரம்பிக்கும். செலவுகள் கட்டுக்குள் வரும் அல்லது செலவுகளால் பாதிப்பு ஏற்படாதவாறு சூழ்நிலைகள் இருக்கும். தேவையான அளவு ஓய்வும் நேரத்திற்கு சத்தான உணவும் சாப்பிடும் பாக்கியம் கிட்டும்.

23.09.2013 முதல் 08.11.2013 முடிய  குரு பெயர்ச்சியின் பலன்கள்:

மீண்டும் மேஷ ராசியினர் குடும்பத்தில் சற்று குழப்பமான சூழ்நிலை நிலவும். நிதான போக்கை கடைபிடித்தால் ஏற்படும் பாதிப்பை சற்று தவிர்க்கலாம். செலவு வகைகள் சற்று அதிகரிக்க கூடும். அதிக வேலை பளுவால் மீண்டும் ஓய்வு சற்று பாதிப்பை அடையக்கூடும்.

08.11.2013 முதல் 21.02.2014 முடிய  குரு  பெயர்ச்சியின் பலன்கள்:

குரு இந்த காலத்தில் வக்கிர நிலையை அடைகின்றார். எந்த ஓரு கிரகமும் வக்கிர நிலையை அடையும் பொழுது தன்னுடைய உண்மையான போக்கினை மாற்றி நாம் எதிர்பாராத பலனை செய்யும். நாம் இந்த வக்கிர குரு பலனை பின்பு ஆராய்வோம்.

மேஷ ராசியினரின் கவனத்திற்கு:

1. குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி பலன் நமது வாழக்கையில் சிறிய அளவே மாற்றங்களை கொடுக்கும் சக்தி உள்ளது. 

2. அவரவர் தசா மற்றும் புத்தி பலன்களை பொறுத்தே வாழ்கையில் நிகழ்வுகள் நடைபெறும்.

3. இந்த குரு பெயர்ச்சி பலன்கள் உங்களின் தசா மற்றும் புத்தி அடிப்படையில் சற்று மாறுபட்டு நடைபெறும்.

4. மேஷ ராசியில் பிறந்தவர்கள் மோசமான தசையில் இருந்தால் இந்த குரு பெயர்ச்சி சற்று அதிகமான குடும்ப மற்றும் செலவுகளை சந்திக்க நேரும்.

5. மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு குரு கெட்ட ஆதிபத்தியம் ஏற்பட்டு  இப்பொழுது குருவின் மஹா தசை நடந்து கொண்டு இருந்தால் சற்றே மோசமான வகையில் பலன்கள் நடை பெரும் 

6. 2வது, 7வது மற்றும் 9வது  வீட்டு கிரகத்தின் திசை நடந்து அந்த கிரகம் மோசமான வீட்டில் இருந்தால் கண்டிப்பாக மோசமான சூழ்நிலை வீட்டில் நிலவும்.

7. 12வது வீட்டின் கிரகம் பலம் இழந்தோ அல்லது துர் ஸ்தான த்தில் இருந்து திசை நடத்தினால் அப்பொழுது குருவின் பெயர்ச்சி கூடுதல் கெட்ட பலன் தரும். செலவுகள் கட்டுக்கு அடங்காது. அதிகப்படியான வேலை பளுவினால் உடல் நலம் பதிக்கலாம்.

8. குரு பிறந்த ஜாதகத்தில் நல்ல விட்டில் இருந்தால், குரு பெயர்ச்சி நன்றாக அமையவில்லை என்றாலும் வாழ்க்கை நன்றாகவே அமையும்.

9. நல்ல திசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது, கெடுதலான குரு பெயர்ச்சியால் பெரிய துன்பங்கள் நடக்காது.

10. பாக்கிய ஸ்தான அதிபதியான குரு எவ்வளவு கெட்ட  இடத்தில இருந்தாலும் குரு பெயர்ச்சியில் மேஷ ராசி அன்பர்களுக்கு நன்மையே செய்ய முற்படுவார்.முடியாமல்  போகும் நிலையில் கூட கெடுதல் செய்ய மாட்டார்.

11. குருவின் பலமற்ற பார்வை 7வது, 9வது மற்றும் 11வது வீட்டில் விழுகின்றது. ஆகவே குடும்ப உறவுகள் பாதிப்பை அடையாது. ஆனாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.

12. செலவு செய்யும் முறையில் மேஷ ராசியினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க நடந்து கொள்ள வேண்டும்.

13. சரியான நேரத்தில் தூங்கி சரியாக சாப்பிட்டு உடல் நலத்தினை பேன வேண்டும்.

14. குருவின் பரிகாரம் செய்யும் பொழுது இந்த குரு பெயர்ச்சியால் வரும் துன்பங்கள் குறைந்து இன்ப சூழ்நிலை நிலவும். 

குரு பரிகார முறைக்கு எங்களது www.jothidapariharam.blogspot.in என்ற வலைதளத்திற்கு வாருங்கள். படித்து பயன் பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

MESHA RASI, MESHA LAGNA AND ASWINI NAKSHATRA

Mesha Rasi (Moon Sign - Aries) and Mesha Lagna (Ascending Sign - Aries): The Mesha Rasi (Aries Sign) is the first sign among the 12 Zodiac signs in the Vedic Astrology. First you must understand, what you mean by Lagna (Ascendant Sign/Rising sign) and Rasi (Moon sign)  FACTS ABOUT RASI & LAGNA 1. The Mars owns two houses @ Aries and Scorpio, which are given in Red Color. 2. The Venus owns two houses @ Taurus and Libra, which are shown in White Color 3. The Budhan (Mercury) owns two houses @ Gemini and Virgo, which are shown Green in Color 4. The Guru (Jupiter) owns two houses @ Sagittarius and Pisces, which are shown in Yellow in color 5. The Shani (Saturn) owns two houses @ Capricorn shown in Blue color and the Aquarius, which are shown in Black Color. 6. The Moon owns Cancer sign, which is shown in Ivory color 7. The Sun owns the Leo sign, which is shown in Orange color. The Aries sign is owned by the Mars. Those who are born in the Aswini Nakshatra, Bharani Naksh

Ashtama Sani for Mesha Rasi

2014 Sani Peyarchi Palangal for the Mesha Rasi (Aries Sign) natives: The Shani would be in the 8th position for Mesha Rasi (Aries sign) natives for the next 2 1/2 Years. Thus the Sani is labelled as "Ashtama Sani" by getting placed in the 8th house. What does it mean to the Mesha Rasi (Aries sign) natives? Let us find out the probable results for the Mesha Rasi (Aries sign) natives for the next 2 1/2 Years. Before that let us find out the reason for Sani assuming important role in the Astrology Importance of Sani: Among all the 9 planets, the Sani moves very slowly taking nearly 2 ½ Years to cross a single Zodiac sign. If the position of the Sani is favourable and gets stronger strength, then the 2 ½ year’s period remain comfortable. But on the other hand, if the Sani remains in a malefic house and gets poor strength, then it will make the natives's life treacherous for the entire 2 ½ Years period. That is, the longer transit period of the Sani is the main reaso

MESHA RASI PALAN 2023 JANUARY

2023 January Aries Career Horoscope 2023 January Mesh Rashifal Job searches, Job promotions & Project implementations: Good progress & successful results during the entire month of January 2023. Setbacks are likely from 1 st to 3 rd January 2023. Difficulties are likely from 6 th to 8 th January 2023. Work Attendance, Work efficiency & Productivity: Low productivity & mixed efficiency from 1 st to 17 th January 2023. Moderate but stable production levels from 18 th to 31 st January 2023. Sales & Marketing: Good sales & good marketing feedback during the entire month of January 2023. Difficulties are likely from 1 st to 3 rd January 2023. Competitions are likely from 6 th to 8 th January 2023. Payment Collections & Profits on Investments: Fluctuating profits & erratic payment collections from 1 st to 17 th January 2023. Good & stable profits from 18 th to 31 st January 2023. Borrowings & Debt Holdings: Fluctuating debt